மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி மாவட்டம் தென்காசியில் 11-வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்பதை வரவேற்று உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பல்வேறு போட்டிகள் மட்டுமில்லாமல் பல சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் கடையம்-இரவணசமுத்திரத்தை சேர்ந்த சகோதரிகள் மிஸ்பா, ஷாஜிதா ஆகிய இருவரும் ஆணிப்பலகை மற்றும் செங்கல்லில் அமர்ந்து பல்வேறு விழிப்புணர்வு யோகாவில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரத்தை சேர்ந்த மளிகைக்கடை ஊழியர் முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதியரின் மகள்கள் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் (பி.என்.ஒய்.எஸ்) மாணவி சிங்கப்பெண் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா (2016-2018-ல் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய யோகா போட்டிகளில் 2 முறை தங்கம்),குற்றாலம் செய்யது பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப் ஆகிய சகோதரிகள் இருவரும் கல்வி உதவித் தொகை பெற்று பயின்று வருகின்றனர்.
இவ்சகோதரிகள் அவர்களது உள்ளூரில் வைத்து 11-வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் தவறான பாதைக்கு சென்றால் அவர்களை நல்நெறி படுத்தும் வண்ணம் உடல் ஆரோக்கியம் பெற்று கல்வி மற்றும் பொதுநலனில் அக்கறைகளை மேற்கொள்ளும் விதம் யோகா தினத்தை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளில் கொண்டாட வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் சுற்றறிக்கை அனுப்பி யோகாவை சிறப்பித்து கொண்டிருப்பதையும் “ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” என்பதை வரவேற்று உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஆணிப்பலகை மற்றும் செங்கல்லில் அமர்ந்து தேசியக்கொடியை கையில் பிடித்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு யோகாசனத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் யோகா மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சியாசிரியர் குருகண்ணன், மாணவிகள் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும், கல்வியுடன் யோகா,ஸ்கேட்டிங் மூலம் பல போட்டிகளில் கலந்து கொண்டு வருவது மட்டுமில்லாமல் 3 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பல விருதுகள் மற்றும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வரும் சாதாரண குடும்ப வர்க்கத்தை சார்ந்த சாதனை மற்றும் பல சமூக விழிப்புணர்வுகளில் ஈடுபட்டு வரும் இந்த அக்கா,தங்கையை இவர்களது திறமையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாநில,மத்திய அரசுகளின் விருது பெற தென்காசி மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டுமென விளையாட்டு ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.