மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ரா ஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் களைக்கட்டி வரும் சூழ்நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் பல ஆயிரம் கணக்கில் குவிந்து வருகின்றார் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதாலும் அவ்வப்போது நீரின் அளவை குறித்து மாவட்ட நிர்வாகம் குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து நான்கு தினங்களாக குளிக்க அனுமதிக்கப்படுகிறது இந்நிலையில் ஐந்தருவிப்பகுதியில் சுமார் இரண்டு பவுன் தங்க கை செயின் கீழே கிடந்துள்ளது.
அருவிக்கு குளிப்பதற்காக வந்தபோது இதை கண்டு எடுத்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்க கைச்செயினை குற்றாலம் காவல் நிலையத்திற்குநேரில் சென்று உதவி ஆய்வாளர் மாணிக்க செல்வியிடம் ஒப்படைத்தனர்
இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தம்பதியரின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து த வாழ்த்து தெரிவித்தார்.விலைமதிப்பு மிக்க பொருட்களை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்றும் இது போல ஆஜராக நழுவ விடும் பொருட்கள் திருப்பி கிடைப்பது மிகவும் அபூர்வம் என்றும் இந்த தம்பதிகள் போல் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்று காவல்துறை ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.இந்நிகழ்வினை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாராட்டினர்