சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம்
உலக யோக தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பேறுஅள்ளி கிராமத்தில் மைதானத்தில் உலக உலக யோகாசனத்தை முன்னிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யோக தினம் விழிப்புணர்வு பயிற்சி முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது
இந்த யோகா நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் பொதுச் செயலாளர் கார்த்திகேயன், பிஜேபி பிரமுகர்கள் கோபாலகிருஷ்ணன், சபரி, ராஜா, கிருஷ்ணமூர்த்தி, அருணா, ரகு, நடராஜ், கோவிந்தராஜ், கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது
யோகாவின் நன்மை மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது
தினந்தோறும் மக்களை யோக பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, பத்மாசனம், சக்கராசனம் ,பிரனாயசனம் பயன்களை விளக்கம் தந்து பயிற்சி அளித்தனர்.யோகா பயிற்சியின் மூலம் முதுகு வலி, மூட்டு வலி, இரத்த உயர்வு அழுத்தம், இருதய பிரச்சனையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் உடலுக்கு உடற்பயிற்சி வலுவூட்டுவது போல் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கும் ,ஞாபக சக்தி பெரும் ஆற்றல் புரிகிறது யோகாசனம் இதனால் யோகா என்ற அற்புத பயிற்சியை நாமும் தினந்தோறும் கடைப்பிடித்து அதன் பயனை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உலக யோகாசன தினம் கடைப்பிடிக்கப்படுகிறது யோகாசன பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டனர்