கோவை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக நல்லிணக்கம்,உலக அமைதிக்காக கோவையில் நடைபெற்ற இராஜ யோக தியானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்…
பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் சார்பாக உண்மையான அன்பு,அமைதி,தூய்மையான மனநிலையை உணரும் வகையில் இராஜயோக தியான நிகழ்ச்சிகளை இலவசமாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர் இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை வ.ஊ.சி.மைதானத்தில் நடைபெற்றது..
இதில் தினமும் யோகா செய்வதால் மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழ்வது,மன அமைதி கிடைக்க யோகா செய்வது குறித்த முறைகள் குறித்து கூறப்பட்டது இதில்,ஆண்கள்,பெண்கள், பள்ளி மாணவர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..