தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பில் மனித நேயருக்கான விருது தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் மனிதநேயத்தோடு உதவிக்கரம் நீட்டிய தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவுக்கு லண்டன் பாராளுமன்றத்தில் மனித நேயருக்கான விருது வழங்கப்பட்டது

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் பெருந் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலே முடங்கி கிடந்தனர். இந்த நேரத்தில் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தமிழ்நாடு கேரளாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ரூபாய் 4 கோடியில் அரிசி பருப்பு, காய்கறிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கினார்

மேலும் பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கும் மாற்று திறனாளிகள் திருநங்கைகள் நடன கலைஞர்கள் பழங்குடி இன மக்கள் என்று அனைத்து பொது மக்களுக்கும் உதவித்தொகை வழங்கினார்

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கும் ரூபாய் 25 லட்சம் வழங்கினார் தனக்கு சொந்தமான பத்துக்கு மேற்பட்ட வாகனங்களை கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இறந்தவர்களின் உடல்களை ஏற்று செல்வதற்கும் வழங்கினார்

இவரது சேவையை பாராட்டி இந்த சேவைகளை ஊக்குவிக்கும் விதமாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் லண்டன் கிரெய்டன் தமிழ் சங்கம் சார்பில் சிறந்த மனித நேயருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது

இந்த விழாவுக்கு லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் சுமதி ஆகியோர் தலைமையில் லண்டன் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சரோ சோன்ஸ் மனித நேயருக்கான விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் பி.எல்.ஏ
ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு வழங்கினார்கள்

மேலும் இந்த விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜிம்டிக்சன். குரிந்தர் சிங். ஜோசன் தாஸ் அத்வால் ப்ளாரன்ஸ் எசாலிமி . பாபி டீன் சூசன் லண்டன் மேயர் அப்பு தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை கிரேடன் தமிழ் சங்கம் சார்பில் துணை மேயர் தாமோதரன் டாக்டர் பாட்டழகன் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *