தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா துறை தலைவரும், பேராசிரியருமான சரோஜா மாணவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக்கொடுத்து பேசுகையில் , உடலும் ,மனமும் சேர்ந்து புத்துணர்வுடன் இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.அதற்கு அனைவரும் இளம் வயது முதலே யோகாவை கற்றுக்கொண்டு தினமும் யோகா செய்ய வேண்டும். யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி கொள்ளுங்கள்.இவ்வாறு பேசினார்.
அழகப்பா பல்கலைக்கழக யோகா துறை மாணவி ஜெயஸ்ரீ பயிற்சியில் மாணவர்களின் யோகா நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.