எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் சர்வதேச யோகாதினம்
மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இது ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் முயற்சிக்குப் பிறகு ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது. அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி மேற்கொள்வதால் மனம் மற்றும் உடலுக்கு கிடைக்கும் நன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் தலைமை ஏற்க, உதவி தலைமை ஆசிரியர்கள் என்.துளசிரங்கன்,டி. சீனிவாசன் முன்னிலை வகிக்க இவ்வாண்டின் லயன்ஸ் சங்க தலைவர் எம்.ஆரிப் அலி,சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இவருடன் லயன்ஸ் சங்க செயலர் எஸ்.ராம்ராஜ், பொருளாளர்,ஆர். வெங்கடேஸ்வரன், வட்டாரத் தலைவர் பி. சரவணகுமார், சங்க சங்க உறுப்பினர்கள் பூவரசன் மகேஸ்வரன், காசி. இளங்கோவன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகாவை சீருடை அணிந்து செய்து காட்டினர். இந்நிகழ்வினை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்திவேல்,ஆர். ராகேஷ், கபிலன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். விழா பார்வையாளராக 1500 மேற்பட்ட மாணவ, மாணவிகளும், பள்ளியின் மூத்த ஆசிரியர் வி. முருகபாண்டியன் உட்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி தொகுப்பினை முதுகலை ஆசிரியர் ஜி. அரங்கநாதன் செய்தார்.