நம்மாழ்வார் கல்லூரியில் விளையாட்டுபோட்டி அமைச்சர் துவக்கிவைத்தார்
மநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நம்மாழ்வார் விவசாயகல்லூரியில் SMAC 2025 விளையாட்டுபோட்டி இன்று துவங்கியது இதனை தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சரும் முதுகுளத்தூர் சட்டமன்றஉறுப்பினருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் துவக்கிவைத்தார்
இதில் 11 விவசாயகல்லூரியில் இருந்து விளையாட அணியினர் வந்துள்ளனர் முன்னதாக புறாக்களை பறக்கவிட்டு அமைச்சர் விளையாட்டுபோட்டிகளை துவங்கிவைத்திவைத்தார் பின்னர் பதினோறு கல்லூரி விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடத்தினார்கள் கல்லூரி சேர்மன் எம்.ஜ.அகமதுயாசின் வந்திருந்த அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்
போட்டிகள் நான்குநாட்கள் நடைபெறும் இதில் கிரிக்கெட் புட்பால் வாலிபால் பால்பேட்மிட்டன் டேபிள்டென்னீஸ் செஸ் கேரம் போன்ற போட்டிகள் நடைபெறுகின்றது முதல்போட்டியான கிரிக்கெட்போட்டியில் அமைச்சர் விளையாடினார்
நிகழ்ச்சியில் கமுதி மத்திய ஒன்றியகழக செயலாளர் சண்முகநாதன் உட்பட கழக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர் நிறைவாக கல்லூரி பிரின்சிபால் dr.டி.திருலேணி நன்றிகூறினார். இன்றுநடந்த கிரிக்கெட் போட்டியில் ஆதியாராசக்தி கல்லூரியும் வானவராஜன் கல்லூரியும் மோதினஇதில் வானவராஜன் கல்லூரிவெற்றிபெற்றது