மணலி புதுநகர் அருகே உள்ள விச்சூர் சிட்கோ பகுதியில் காவலாளி மீது இரும்பு கதவு விழுந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காவலாளி உயிரிழப்பு
விச்சூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ஹரி கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் & கால்வனைசிங் கம்பெனியில் கடந்த 14 ஆம் தேதி அதில் காவலாளியாக பணிபுரியும் வெள்ளி வாயில் சாவடி பெருமாள் கோவிலை சேர்ந்த குமாரசாமி வயது( 64) என்பவர் அன்று காலை பணியில் இருக்கும் போது காலை 9 மணி அளவில் இரும்பினால் செய்யப்பட்ட மெயின் கேட் எதிர்பாராத விதமாக அவர் மீது சாய்ந்ததில் இதில் காவலாளி கால் மற்றும் பாதி உடல் சிக்கிக் கொண்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கேட்டை தூக்கி அவரை காப்பாற்றினார் பின்னர் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
இந்த விபத்தில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது இதில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இதனை அடுத்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து காரண காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காவலாளி மீது இரும்பு கேட் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது