கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது போலிஸில் புகார்.

    கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் அவர்களுக்கு பொதுக்கூட்ட மேடையில் கொலைமிரட்டல் விடுத்த கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவராக இருக்கும் க.தமிழரசன் கோவில்பட்டியில் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், பொதுநலப்பிரச்சனைகள், அரசு திட்டங்கள் முறையாக லஞ்சலாவன்யங்கள் இல்லாமல் மக்களுக்கு சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நடத்துவது, மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார்.
 
மேலும் இவர் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரை அச்சுறுத்தும் வகையில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி கொலைமிரட்டல் விடுத்து பேசியுள்ளதாள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு புகார் அளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், INTUC ராஜேந்திரன், மகேந்திரன், காங்கிரஸ் கட்சி செயலாளர் துரைராஜ், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், வழக்கறிஞர் முத்துக்குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், ஈஸ்வரன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *