திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் பள்ளியின் சார்பாக போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவங்கி வைத்தார். பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று குடவாசல் பேரூந்து நிலையம் அடைந்தது.
பின்பு மக்கள் அதிகம் கூடும் வழியாக புறப்பட்டு பேரணி பள்ளி வளாகம் வந்து அடைந்தார்கள்.
நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர் ராம்பிகா, உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜா மற்றும் அன்புராஜ் வழி நடத்தினார்கள், நிறைவாக சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா தேவி நன்றி தெரிவித்தார்.