பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் தென்கச்சி பெருமாள் நத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு தோழர் குருமூர்த்தியின் இல்லத்தில், தோழர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தோழர்கள் அன்பழகன், சுப்பிரமணியன், குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், மாவட்ட செயலாளர் தோழர் இராமநாதன் மாவட்ட மாநாட்டிற்கான பேரணி குறித்த விவரங்களை விளக்கினார். புதிய கிளை செயலாளராக தோழர் கே. குருமூர்த்தி தேர்வாகினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
தென்கச்சி மெயின் ரோட்டில் இருந்து வள்ளலார் ஆலயம் வரையிலான பாதையை தரமான தார் சாலையாக மேம்படுத்த வேண்டும்.நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள நூலகத்தை நூலகர் நியமனம் மூலம் செயல்படுத்த வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட எள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தென்கச்சி கீழக்குடி காடு–அன்னகாரன் பேட்டை சாலைக்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.
பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கான நஷ்டஈட்டை வழங்க, உண்மையான விளைச்சல் புள்ளி விவரங்களை விவசாயிகள் முன்னிலையில் பதிவு செய்யவேண்டும்.
தென்கச்சிக்கு இயக்கப்படும் நகர பேருந்துகள் பொதுமக்கள் தேவையை பூர்த்தி செய்யாத நிலையில், காலை 7 மணி மற்றும் மாலை 7 மணிக்கு பேருந்து இயக்க போக்குவரத்து துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நிபந்தனை இன்றி முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.