திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்
திருவாரூரில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குறைந்த விலைக்கு எடுப்பதாக கூறி விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் .
திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் கோடை பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர் அவ்வபோது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பருத்தி பயிர்கள் அழுகிய நிலையில் மீண்டும் மீண்டும் மூன்றாவது முறையாக சாகுபடி செய்த நிலையில் தற்போது பருத்தி பஞ்சு எடுத்து அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று பருத்தி ஏலம் விடப்பட்ட நிலையில் அதிகபட்ச விலையாக 77 ரூபாய் வரை எடுக்க விலைப்பட்டியல் ஒட்டப்பட்டது ஆனால் உள்ளூர் வியாபாரிகள் அதிகபட்சமாக 53 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை மட்டுமே எடுப்பதாக தெரிவித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து வந்த திருவாரூர் நகர போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைதொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் மேலாக திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது