தேனி மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலன் கருத சமூக நல்ல மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி seniorciteizen.tnsocialwelfare.tn.gov
In. உருவாக்கப்பட்டு கடந்த 2023 செப்டம்பர் முதல் செயல் பட்டு வருகிறது
இந்த கைப்பைசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம் பெற்றுள்ளது குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள் மருத்துவமனைகள் மக்கள் மருந்தகம் ஒன்றிய மாநில திட்டங்கள் மாவட்ட திட்ட சேவைகள் ஆணையம் அதிகாரிகள் விபரம் உடற் பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள் மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகள் தெரிவித்திடவும் இச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன் பெற்று வருகின்றனர் எனவே அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்