தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜீன்- 28. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகர செயலாளர் நசீர் தலைமையில் பாலஸ்தீன காசா நகரத்தின் மீதான இனவெறி போரை இஸ்ரேல் அரசு உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு மக்கள் சிறுபான்மை நலக்குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயலாளர் பி.செந்தில்குமார், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆப்தின், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆகியோர்.
இனவெறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பெஞ்சமின் போர் குற்றவாளி என அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும், பாலஸ்தீன காசா மீதான தாக்குதல்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உணவு, உடை, குடிதண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஐநா சபை ஏற்பாடு செய்ய வேண்டும், இஸ்ரேல் அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி போரை நடத்த வழி நடத்தும் அமெரிக்காவையும் சிறுபான்மை மக்கள் நலகுழு கண்டிக்கிறது, இந்திய அரசு இஸ்ரேல் உடனான தூதரகம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் சாம்பான், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், மாநகர செயலாளர் வடிவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர செயலாளர் அபுசாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.