எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நகர் பகுதியில் கைவிடப்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள்- சமூக விரோதிகள் கூடாரமாய் மாறிய தெருவில் இயங்கும் இரண்டு அரசு பள்ளி மாணவியர் விடுதிகள் .பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வலுக்கும் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் பிரதான பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகரில் நீதிபதி இல்லம், வருவாய்துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் அரசு அலுவலர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது.முக்கியத்துவம் வாய்ந்த தெரிவில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவிகள் விடுதி,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி மாணவியர் விடுதியும் இயங்கி வருகிறது.
ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிதாக அமைக்கபட்டதால் நீதிபதிகள் குடியிருப்பும் அங்கே மாற்றப்பட்டது. வருவாய் துறை சார்ந்த அலுவலக கட்டிடடங்கள் பழுதடைந்ததால் அவையும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது.அதே போல் அலுவர்களுக்கான இரு குடியிருப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில் மற்றவை பயன்பாடு இல்லாமல் கைவிடப்படுள்ளது.பள்ளி மாணவிகளின் இரண்டு விடுதிகள் 100 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் இயங்கி வருகிறது.
இந்நிலையில் பயன்பாடு அற்று கைவிடப்பட்ட பழுதடைந்த கட்டிடங்கள் தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது.மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மது அருந்தும் கூடமாக இப்பகுதி உள்ளதால் விடுதி மாணவிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இச்சாலையை கடக்கவே அஞ்சும் நிலை உள்ளது.சுற்றுச்சுவர் இன்றியும் புதர்மண்டி காட்சியளிக்கும் கட்டிடடங்கள் இரவு நேரத்தில் காண்போரை அச்சமடைய வைக்கிறது.
நகரின் பிரதான பகுதியில் பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு அச்சுருத்தலாகவும் சமூக விரோதிகள் கூடாரமாகவும் விளக்கும் பயனற்ற அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவர் குடியிருப்புகளை இடித்து அகற்றவும் இரவு நேரங்களில் காவல் துறை ரோந்துபணியை பலப்டுத்தவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.