தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சோ்க்கை பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பொியசாமி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் கூறிய அறிவுரையின்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதுமிகவும் முக்கியமான தோ்தல் அனைவரும் தன்னுடைய பொறுப்புகளை உணா்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் திமுக என்றால் அதுஓரு குடும்ப பாச உணா்வோடு பழகும் கட்சி தங்களது பகுதியில் வரும் 1ம் தேதி ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நடைமுறையை அனைவரும் பின்பற்றி தொடரவேண்டும்.

தூத்துக்குடி தொகுதியில் ஓரு பகுதியில் ஆயிரம் போ் இருக்கிறாா்கள் என்றால் அதில் குறைந்த பட்சம் 300பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டு குறைய கூடாது. கூடுதலாக தான் இருக்க வேண்டும். அதே போல் வார்டு பகுதியில் உள்ள வட்டச்செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அனைவருடைய இல்லத்திற்கு நோில் சென்று உறுப்பினர்களை சோ்க்க வேண்டும்

கடந்த காலத்தில் புதுப்பிக்காத உறுப்பினா்களையும் புதுப்பிக்கும் வகையில் நினைத்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் எல்லோருடைய இல்லத்திலும் ஓருவகையில் நன்மைகள் கிடைத்திருக்கும் சிலருக்கு விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அந்த நன்மைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும்.

ஏதேனும் உதவி தேவை என்றால் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தொிவிக்கலாம் ஓட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஓற்றுமையுடன் பணியாற்றி 2026ல் தோ்தலில் 200தொகுதி என்ற இலக்கை நாம் வென்றாக வேண்டும். அதற்காக சபதம் ஏற்று பணியாற்றுங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டும். பணியாற்றுபவா்கள் நல்லமுறையில் பணியாற்றுங்கள் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்திற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், தொகுதி பொறுப்பாளரும் மாநில இளைஞா் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் மதியழகன், அபிராமிநாதன், கவிதாதேவி, ரமேஷ், சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ், ஜெயக்கணி, ரூபஸ் அமிா்தராஜ், ஆனந்தசேகா். முருகஇசக்கி, சாரதி, டைகர்வினோத், மாநகர பல்வேறு அணி நிர்வாகிகள் ரவி, பால்ராஜ், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், ராமசந்திரன், கருப்பசாமி, பரமசிவம், நாராயணவடிவு, சந்தனமாாி, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமாா், குமரன், வினோத், நாகராஜன் பாபு, மணிகண்டன், சாகுல்ஹமீது, வேல்பாண்டி, நாராயணவடிவு, செல்வலட்சுமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், செல்வகுமாா், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகா், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமாா், முத்துராஜா, டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமாா், லியோஜான்சன், மூக்கையா, ரவிசந்திரன், கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமாா், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், இசக்கிராஜா, நாகேஸ்வாி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, ஸ்ரீதா், அஸ்வின்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், சூா்யா, காசிராஜன், பகுதிபொருளாளா் உலகநாதன், பகுதி பிரதிநிதிகள் பேச்சிமுத்து, செந்தில்குமாா், பிரபாகா், லிங்கராஜா, வட்டப்பிரதிநிதிகள் அருணகிாி, பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *