திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சைவக் குரவர்களின் ஒருவரான மாணிக்கவாச ஸ்வாமிகள் குருபூஜையினை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள நால்வர் குருமூர்த்தங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்