முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் அதிகரிக்க கூடும் என்பதால் கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச் செல்லவோ வேண்டாம் எனவும், சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர் என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து