கம்பம் நகரில் மலை போல் குவிந்துள்ள குப்பையால் சுகாதார கேடு தேனி மாவட்டம் கம்பம் நகரில் 7 ஆவது வார்டு சுப்பிரமணிய கோவில் தெருவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன மேலும் இந்த தெருவில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்க்கு உட்பட்ட புறக் காவல் நிலையம் உள்ளது
இந்த தெருக்களில் தினந்தோறும் குப்பை அல்ல நகராட்சி தூய்மை பணியாளர்கள் வருவதில்லை . இதனால் இந்த தொகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை அந்த தெருக்களில் கொட்டி விடுகிறார்கள் மழை போல் குவிந்துள்ள குப்பையால் தற்பொழுது பெய்து வரும் கனமழை மற்றும் மிதமான சாரல் மழையால் மழை நீர் குப்பைமேல் தேங்கி கடுமையான சுகாதாரக்கேடு ஏற்படுவது
உடன் ஒரு விதமான துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதி மக்கள் மற்றும் அந்த பகுதி வெளியே செல்லும் பொது மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் மேற்படி தெருவில் மலை போல் குவிந்து ள்ள குப்பைகளை அகற்றி மக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா நகராட்சி சுகாதார அதிகாரிகள்.