அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு பொதுக்கூட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் டி தண்டபாணி அனைவரையும் வரவேற்று பேசினார்
அரியலூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார் கட்சியின் மாநில துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ நா பெரியசாமி சிறப்பு உரையாற்றினார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் முஅ பாரதி முன்னாள் மாவட்ட செயலாளர் இரா உலகநாதன் ஆகியோர் பேசினார்கள்
தா.பலூர் கரிகாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தோழர்களுக்கு கைத்தறி ஆடைகள் அணிவித்தார் மாவட்ட துணைச் செயலாளர் கலியபெருமாள் அனைவருக்கும் நன்றி கூறினார் முன்னதாக திருச்சி பாரதி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது