எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
வாயலபாடி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை.
பெரம்பலூர்.அக்.15. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி, கீரனூர், வீரமாநல்லூர் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அதில் தங்கள் தெருவில் சுற்றி திரியும் நாய்களால் மிகவும் சிரமப்படுவதாகவும்.நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் இதனால் சாலைகளில் நிம்மதி இழந்து அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும். பலநேரங்களில் நாய்கள் சண்டையிட்டு சிதறி ஓடும்பொழுது இடையில் குழந்தைகள், முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.
இதனால் பல நபர்கள் நாய் கடியால் அவதிபடுகின்றனர்.இரண்டு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை.நாய் துரத்தி வந்து கால்களை கடிக்கின்றன இதனால் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.குழந்தைகள் கைகளில் உணவு பொருட்கள் வைத்திருந்தால் வாயால் கவ்வி கொள்கின்றன.இதனால் அச்சமுடன் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.