திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சமரசமற்ற போராளி, மிகச் சிறந்த போர் குணமிக்க ஆதிச்சமங்கலம் எஸ்.உதயகுமார் அவர்களின் 75- வது அகவை நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
நிகழ்வில் திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே.எஸ்.கேசவராஜ், தஞ்சை வடக்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் மு.அ.பாரதி, வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆதிச்சமங்கலம் முனைவர் ஜெய.இளங்கோவன், திருவாரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் முரளிதரன், திருச்சி சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில் குமார், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பட்டம் சி.தெட்சிணாமூர்த்தி, டீ.கலியமூர்த்தி, ஆர்.சேகர், ஜி.ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.