மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள நீரால் நோய் பரவும் அபாயமும், விஷப்பூச்சிகள் புகும் அச்சமும் நிலவுகிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.