தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் சங்க நிறுவனத் தலைவர் அரியலூர் நல்லப்பன் தலைமையில் பொருளாளர் ராதாகிருஷ்ணன் தணிக்கையாளர் ராஜேந்திரன் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் அழகுமுத்து கரிகாலன் சிங்கார வடிவேல் முத்து செல்வன் புவனேஸ்வரி ஆகியோர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை சந்தித்து 20 ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் 128 தொழில்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்