திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள மன்னவனூர் கிராமத்திற்கான பாரம்பரிய கிராம சபைக்கூட்டம் பாரம்பரிய கிராம பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வன உரிமைச்சட்டம்- 2006 – பற்றிய முக்கிய ஷரத்துக்கள், பாரம்பரிய கிராமசபை அமைக்க வேண்டியதன் அவசியம், பாரம்பரிய வன உரிமைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம், அதன் வழிமுறைகள், வன உரிமைக்குழு, சமுதாய வன உரிமைகள், சமூக வன வள மேம்பாட்டு உரிமைகள், குடிநீர், வழிபாட்டு உரிமைகள் பற்றியும், கோட்டாட்சியரின் தலைமையிலான ,உட்கோட்ட வன உரிமைக் குழு, மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட வன உரிமைக்குழு – பணிகள், Form_ A, Form – B, Form – C, பற்றியும் வன உரிமைச்சட்டம் முதன்மைப் பயிற்சியாளர்.சதாசிவம் விளக்கினார்.
இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டதில் மன்னவனூர் பாரம்பரிய கிராம சபை தலைவராக.பால்ராஜ், செயலாளராக.நீலமேகம் தேர்வு செய்யப்பட்டனர்.
வன உரிமைக்குழு வன உரிமைக்குழுவுக்கு 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.