பரமத்தி-வேலூர்

வேலூர் TO திருச்செங்கோடு மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வழித்தடத்தினை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் கலந்துகொண்டு, புதிய பேருந்து சேவைகளை (4.7.2025) தொடங்கி வைத்தார்*.

இந்த நிகழ்ச்சிகளுக்கு, நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் முன்னிலை விகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பரமத்தி-வேலூர் முதல் திருச்செங்கோடு வரை மகளிர் விடியல் பயண பேருந்து சேவை மற்றும் பரமத்தி வேலூர் முதல் நாமக்கல் வரையிலான வழித்தடம் 9 A விற்கு புதிய நகர பேருந்து இயக்கம் ஆகிய சேவைகள் ஆகியவற்றை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

இதேபோல, திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து, பரமத்தி-வேலூருக்கு புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவையையும் அமைச்சர் மா. மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களை சந்திக்க பேருந்தில் ஏறி, அவர்களுக்கு அமைச்சர் மா. மதிவேந்தன் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை தலைவர் மகிழ் பிரபாகரன்,பரமத்திவேலூர் நகரக் கழக செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் தனராசு, மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், வேலூர் பேரூர் கழக அவை தலைவர் மதியழகன், ஆதிதிராவிட துறை செயலாளர் உழவர் பட்டி கண்ணன், பேரூர் துணைச்செயலாளர், செந்தில்நாதன், வார்டு கவுன்சிலர்கள் மகளிர் அணி, மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட பொது மேலாளர் T. மோகன் குமார், கோட்ட மேலாளர் செங்கோட்டு வேலவன்
உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *