கும்பகோணம்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை வேடிக்கை பார்க்கும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க.கழக பொதுச்செயலாளரும்,தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் அறிவுறுத்தல்படி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைப்பெற்றது.
கழக அமைப்பு செயலாளர் மனோகான், தலைமை தாங்கினார். மாநகர கழக செயலாளர் ராம.ராமநாதன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் அசோக்குமார்,சோழபுரம் கா.அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பி.எஸ்.சேகர்,மாவட்ட கழக செயலாளர் பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கும்பகோணம் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, பாதாள சாக்கடை சுகாதார சீர்கேடு,
தாராசுரம் பகுதியில் சீரற்ற குடிநீர் வினியோகம்,பழுதடைந்த சாலைகள், பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவு நீர் நிறுத்த வேண்டும், அடிக்கடி பழதாகும் தெரு விளக்குகள் என சீர் செய்யமால் அடிப்படை வசதிகள் செய்வது கூட மறுக்கும் மநாகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் மாநில கைத்தறி பிரிவு செயலாளர் லெனின், மாவட்ட கழக இணை செயலாளர் தமிழ் செல்வி, மண்டல தகவல் அணி செயலாளர் அறிவொளி,மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன்,மகளிரணி செயலாளர் கவிதா ஸ்ரீதர், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கருணாநிதி, பகுதி கழக செயலாளர்கள்
ராஜு, பத்ம குமரேசன், செல்வராஜ்,கிருஷ்ணமூர்த்தி, ரகுபதி பேரூர் செயலாளர் சிங்.செல்வராஜ்,சூரியமூர்த்தி, எம்.இசட்.ஆசாத் அலி,நிர்வாகிகள்
அய்யூப் கான்,ஜஹாங்கீர், உள்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.