துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
03/07/2025 அன்று காலை 11 மணி அளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதிதாக 208 நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னை அடையாறு நகர்புற நலவாழ்வு மையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து துறையூர் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தில் நடைபெற்ற விழாவில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,நகர்மன்ற தலைவர் இ.செல்வராணி,துணைத் தலைவர் ந.முரளி, ஆணையர் வாசுதேவன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
விழாவில் நகர்புற மருத்துவ அலுவலர் டாக்டர் சுஜாதா, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன், நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் முரளி,நகர் மன்ற உறுப்பினர் இளையராஜா, பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், நகராட்சி மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் மற்றும் சுகாதார செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்