தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் கூறியதாவது:

மேட்டூர் அணை திறந்து கல்லணையும் திறந்து தஞ்சாவூர் டெல்டாவில் குறுவை சாகுபடியை முழுவீச்சில் விவசாயிகள் துவக்கி உள்ள வேளையில், தண்ணீர் கடைமடை சென்ற பிறகு கிளை வாய்க்கால்கள் திறப்பது மரபு, இந்நிலையில் 60% கிளை வாய்க்கால்கள் திறக்காத நிலையில் உபரி நீர் வந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவு அடைந்தது.

உரிய நீரை இந்திய ஒன்றிய அரசோ, காவிரி மேலாண்மை ஆணையமோ, தமிழ்நாடு அரசோ பெற்று தராத நிலையில், உபரி நீர் 60,000 கன அடி கர்நாடகத்திலிருந்து வந்தததால் மேட்டூர் அணை நிரம்பி விட்டது.

கல்லணை திறந்து 18 நாட்கள் ஆகியும் முதல் மடையில் உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை. தஞ்சை டெல்டாவில் கிளை வாய்க்கால்களில் தண்ணீரைக் கொண்டு செல்ல கரை காவலர்கள் இல்லை. 90% லஸ்கர் என்று சொல்லப்படுகிற கரை காவலர்கள் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதனால் வாய்க்கால்களில் தண்ணீர் கொண்டு சேர்ப்பதில் இமாலய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் டெல்டாவில் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இன்னமும் வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான அண்ணன் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தூர்வாரும் பணிகள் தஞ்சாவூர் மாவட்டத்திற்குரூ 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி நிதி ஒதுக்கீட்டில் 10% கூட வாய்க்கால் தூர் வாரும் பணிகள் நடைபெறவில்லை. உதாரணமாக அம்மையகரம் கிளை வாய்க்கால் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடக்கினார்கள் எட்டு தினங்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் விதம் 80 ஆயிரம் செலவில் தூர் வாரும் பணியை முடித்து விட்டார்கள். நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்படி தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

ஆனால் நீர்வளத் துறை அதிகாரிகளும் விவசாயிகளுக்கு பயன்பெற வேண்டிய நிதியை பகல் கொள்ளை அடித்திருக்கிறார்கள். தற்போது கொள்ளிடத்தில் முப்பதாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் ஒன்பது மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் அருகாமையில் உள்ள விவசாயிகளின் ஆழ்குழாய் கிணற்றின் நீர்மட்டம் கீழே சென்று இருக்கும். அந்த நீர்மட்டம் உயர்வதற்கு தண்ணீர் திறப்பு தேவைதான். அதுபோல சென்னை மக்களின் குடிநீர் ஆதாரம் வீராணம் ஏரிக்கும் தண்ணீர் செல்ல வேண்டும். முதலில் விவசாய பணிகளுக்கு உரிய தண்ணீரை காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கல்லணை கால்வாய் போன்ற பாசன ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீரை திறக்க காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறேன் .என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *