க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் அருகே 29 ஆண்டுகள் கழித்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 86 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய எம்எல்ஏ நல்லதம்பி
திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காமராஜர்நகர் பகுதியில் வீடுகள் இல்லாமல் வாழ்ந்து வந்த நபர்களுக்கு நான்கு ஏக்கர் ஆதிதிராவிடர் நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு இடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைக்கு பட்டா வேண்டும் என பலமுறை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து 29 ஆண்டுகள் கழித்து இன்று திருப்பத்தூர் MLA நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் சிவசௌந்தரவல்லி ஆகியோர் புத்தரின் பெயரில் 86 பேருக்கு ஆதிதிராவிடர் நத்தம் பட்டா வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது திமுக கட்சியை சேர்ந்த கந்திலி ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி துணை ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன்,செல்வி மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் அசரதன் மற்றும் நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.