கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா தலைமை வகித்தார்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா அனைவரையும் வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா சர்வதேச கூட்டுறவு ஆண்டு குறித்து பேசும் பொழுது ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டினை நல்லுலகை கட்டமைக்கும் கூட்டுறவு என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு 2025 ஆண்டு முழுமைக்கும் தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கூட்டுறவு மூலம் மேம்படுத்த தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பை அனைவருக்கும் தெரிவிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக கூட்டுறவு இயக்கத்தில் இளைஞர்களை மாணவர் பருவத்தில் இருந்து ஈடுபடுத்தும் நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு பள்ளிகளில் மரம் நடு விழா நடத்துதல், மாணவர்களிடையே எழுத்து மற்றும் பேச்சுப்போட்டி நடத்துதல், கூட்டுறவு கல்வி சுற்றுலா, சிறு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியை நினைவுபடுத்தி மாணவர்கள் சிறு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் கூட்டுறவு வங்கிகளில் சிறுசேமிப்பு வங்கி கணக்கு தொடங்கி பயனடையவும் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையினை அவங்களுடைய கூட்டுறவு வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து அவர்களுடைய நலன் பெறவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு வங்கிகள் துணை புரியும் என்பது எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் கூட்டுறவு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. விரைவில் கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லபட இருக்கிறார்கள் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *