சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 3ம் கால யாகசாலை பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் நடராஜர், அகோர மூர்த்தி, புதன், ஸ்வேத மகாகாளி மற்றும் சௌபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் சந்திர, சூரிய மற்றும் அக்னி பெயர்களில் முக்குளங்கள் உள்ளன.

உலகத்தின் தலைவனான ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. பல சிறப்புகளை பெற்ற கோவிலின் குடமுழுக்கு வருகிற 7-ஆம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது வருகிறது. கிழக்கு கோபுரம் அருகில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 95 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்த பூஜையில் தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் மனைவி திருவெண்காடை பூர்விகமாகக் கொண்ட துர்கா ஸ்டாலின் மூன்றாம் கால யாகசாலை பூஜையில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து யாகசாலை பூஜை பொருட்களை பொது மக்களுடன் கலந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து சென்று வழிபாடு மேற்கொண்டார்.

தொடர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க யாகங்கள் செய்யப்பட்டு பூர்ணாக் ஹுதி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *