இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் பரவை நாச்சியார் ஆலய கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
பிறந்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், வேளாக்குறிச்சி ஆதீனம் அபிஷேக கட்டளை சேர்ந்த தெற்கு ராஜ கோபுர வாயில் திருமஞ்சன வீதியில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு பரவை நாச்சியார் உடனுறை அருள்மிகு சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னி்ட்டு (04.07.2025) இரவு யாகசாலை பிரவேசம் நடைபெற்று,அதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா அவர்கள் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் ஆன்மிக பெருமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
வருகின்ற 07.07.2025 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.