தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் உட்பட அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்…,
தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு தூத்துக்குடியில் பேட்டி.!
தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர் வியனரசு தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும் நாடாண்ட தமிழ் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரிகம் பண்பாடும் திருக்கோயில் மையமாகக் கொண்டு தோன்றியவைகள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் வழிபாடுகளையும் குடமுலுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் அன்னை மொழியாம் தெய்வத் தமிழிலே நடத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாகும்.
இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தேன். அப்போது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் மற்றும் மரியகிளாட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசமான நிலை இல்லாமல் சமநிலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு வழிபாட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவாறு தமிழ் வடமொழி இருமொழியிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாடு நிகழ்வு நடத்த வேண்டும் என்றார்.
இதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கக்கோரி எமது கோரிக்கைக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையீடுங்கள் என நீதியரசர்கள் கூறினார்கள். அப்படி ஆணையரிடம் முறையிடவும் ஆணையர் அதை ஆய்ந்து கண்காணிப்பு குழு அமைக்கவும் போதிய காலம் இல்லாததால் நாங்களே குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் கண்காணித்து நீதிமன்ற உத்தரவுக்கு இந்து சமய அறநிலைத்துறை அறிக்கை மாறாக குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகவே தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி குடமுழுத்து வழிபாடு தமிழில் நடத்த வேண்டும் என்ற அவர், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, தமிழ்நாடு மக்கள் இயக்க மாநில தலைவர் காந்தி மள்ளர் உடன் இருந்தார்.
பேட்டி: வியனரசு, தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவர்.