க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி நடைபெற்றது
மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தலைமையில் நமது உரிமைக்காக போராடி வீர மரணம் அடைந்த வீர உழவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திடவும் சாதி மதம் அரசியல் கடந்து நமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றுகூடி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் வீரவணக்கம் பேரணி போராட்டம் நடைபெற்றது.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது கோரிக்கைகளான மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி படி உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திடும் வகையில் சட்டத்தை இயற்றி அமுல்படுத்த கோரியும்
தமிழ்நாடு அரசு தெலுங்கானாவை போல் ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம் ஆண்டுதோறும் உற்பத்தி மானியமாக விவசாயிகள் மற்றும் குத்தகையாளர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும்
தமிழ்நாடு அரசுகள் இறக்கி விற்க வருக விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும்
மேலும் நெல் குண்டாலுக்கு 4000 கரும்பு டன்னுக்கு 6000 நிலக்கடலை குகுன்டாலுக்கு 12,000 மாட்டுப்பால் லிட்டருக்கு 45 எருமை பால் லிட்டருக்கு 65 கறிக்கூலிகளுக்கு வளர்ப்பு குளியாக கிலோவுக்கு ரூபாய் 15 பட்டுக்கூடுகளுக்கு கிலோவுக்கு 500 உற்பத்தி மாநிலமாக வழங்க வேண்டும்
தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து விவசாய கடன்களுக்கும் சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கின்ற கொள்கை முடிவை ரத்து செய்யக் கோரியும் என 12 வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியில் கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்