திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
கார்-லாரி விபத்து: ஏர்பேக் திறக்காமல் பெண்மணிக்கு பலத்த காயம்
தாராபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதிய கார் நொறுங்கியது!…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் பவானி குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகிய நிலையில், தனது உறவினர் ஜெயப்பிரதாவுடன் பழனி கோயிலுக்குச் செல்வதற்காக காரில் புறப்பட்டார்.
விபத்துக்குள்ளான ஜெயப்பிரதா கூடவே பயணித்தவர். அவரும் ஐ.டி. துறையில் பணிபுரிந்து வருவதால் காரில் பயணிக்கும்போது லேப்டாப் பயன்படுத்தி கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கார்த்திக் ஓட்டிய கார் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈச்சர் லாரியின் பின்புறம் மீது வேகமாக மோதியது.
விபத்தில், ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஏர்பேக் திறந்ததால் கார்த்திக் காயமின்றி தப்பினார். ஆனால், பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஜெயப்பிரதா லேப்டாப் பயன்படுத்தியதால் ஏர்பேக் சென்சார் செயல்படவில்லை. இதனால் ஏர்பேக் திறக்காமல் போனது. அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
உடனே பொதுமக்கள் விரைந்து ஜெயப்பிரதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.