காஞ்சிபுரம் இஷின்ரியூ கராத்தே சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியானது காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே இஷின்ரியூ கராத்தே மாஸ்டர் நூறுமுகமது ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள்
விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்ற இப்பேரணியை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
சாலை விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம், போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்குகள், மற்றும் பாதுகாப்பான சாலை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் நடைபெற்ற இப்பேரணியானது வள்ளல் பச்சையப்பன் தெரு, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, கீரை மண்டபம், காவலன் கேட் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் அரங்க மைதானம் வரை சென்று நிறைவுற்றுது.
வழிநெகிலும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும்,ம போதை பொருள் பயன்பாட்டித்கு எதிராக கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையேயும்,வாகன ஓட்டிகளிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அனைவரும் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.