கடத்தூர்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சியில் அய்யம்பட்டி நொச்சிக்குட்டை காவேரிபுரம் குண்டல் பட்டி , கோவில் வனம் , தாளநத்தம் தா நடூர், உள்ளிட்ட 7 குக் கிராமங்கள் உள்ளது அதில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன ,

இதில் நடூர் ( அருந்ததியர்) கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன இப்பகுதி மக்களுக்கு , பத்தாயிரம் லிட்டர் அளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி அதில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது ,

இங்கு கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படாத தால், தங்களது அன்றாட குடிநீர் தேவையை போக்க அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு , சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன , ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாதிற்க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *