அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் கூட்டத்திற்கு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் கதிர் கணேசன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பேசினார்
அமைப்பு செயலாளர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் பேரமைப்பின் விரிவாக்கம் குறித்து விளக்கி பேசினார் பொருளலாளர் புகழேந்தி நிதி நிலை குறித்து பேசினார் பொறியாளர் நாகமுத்து சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார் அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்
பொறியாளர் அறிவானந்தம் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் மங்கயற்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர் வருகிற இரண்டாம் தேதி அமைப்பின் பொதுக்குழுவை அரியலூரில் கூட்டுவது பண்பாட்டுச் செம்மல் விருது வழங்குவது குறித்து பொது குழுவில் முடிவெடுப்பது பண்பாட்டுப் பேரமைப்பின் 12 நோக்கங்களையும் நிறைவேற்றுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அனைவரையும் முன்னதாக அறிவானந்தம் வரவேற்றுப் பேசினார் மங்கையர்கரசி நன்றி கூறினார்