தாராபுரத்தில் தமிழர் ஆட்சி கழகம் – தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை ஆலோசனை கூட்டம் – சமூக நீதி காப்போம் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழர் ஆட்சி கழகம் மற்றும் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில், முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஐந்து சாலை சந்திப்பில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். பாண்டியன் இளைய சேகரன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசுகிறபோது, நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். பாண்டியன் கூறுகையில்:

ஆகஸ்ட் மாதத்தில் தாராபுரத்தில் “சமூக நீதி காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை உருவாக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும்,இது முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் இத்தகைய கூட்டங்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் மேலும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன:

சமூக நீதிக்காக போராடிய சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் முழு உருவ சிலை தாராபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது தாராபுரம் பகுதியில் இளைஞர்களுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வார்டு தோறும் நூலகம் அமைப்பதன் மூலம் மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெறும் வகையில் திட்டமிடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த நிர்வாகிகள், உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சமூக நீதிக்கான போராட்டத்திற்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.

பேட்டி: திரு.டாக்டர் எஸ்.ஆர். பாண்டியன் இளைய சேகரன் தமிழர் ஆட்சி கழகம் – தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *