திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்:குண்டடம் வடுகநாதபுரத்தில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் வடுகநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா திங்கட்கிழமை (ஜூலை 7) அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து அதிகாலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர், விநாயகர் பூஜை, நான்கு வேதங்களுக்கு ஏற்ப நடத்திய யாக பூஜைகள், ஜெயந்தி ஹோமம் உள்ளிட்ட வேதமுறைபடி ஆன பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக வைபவத்தை திருப்பூர் கணபதிபாளையம் சிவ.ஸ்ரீ. பிரகாஷ் சாஸ்திரிகள், திருமலை நகர் சிவ.ஸ்ரீ. செந்தில்நாதன் சாஸ்திரிகள் மற்றும் பசுவ ஸ்ரீ மல்லீஸ்வர சாஸ்திரிகள் கூட்டாக நெறிப்படுத்தினர்.
மதியம் 12.15 மணியளவில் அருள்மிகு ஸ்ரீ சவுண்டம்மனுக்கும், ஸ்ரீ ராமலிங்கேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் பெண்கள் அணியினர் பாரம்பரிய சீர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையொட்டி காலை முதல் அன்னதானம் நடைபெற்று, பல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் அனைத்து ஏற்பாடுகளும் தேவாங்க சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்து வைத்தனர்.