செய்தியாளர் வீ.சக்திவேல்

புவனகிரி வள்ளலார் ஆலயத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வள்ளலார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது

புவனகிரி கடைவீதியில் உள்ள வள்ளலார் ஆலயத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவரது மைந்தன் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ .எஸ்.மதியழகன் தலைமையில் ஆலயத்தில் மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினர்களாக புவனகிரி பேரூர் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், அமுதாராணி மற்றும் அவைத்தலைவர் நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தனர்

இந்நிகழ்வில் திமுக கவுன்சிலர்கள் செல்லபாண்டியன், லதா சங்கர் ,அண்ணாஜோதி, சரஸ்வதி மணிவண்ணன், வினோதினி ராமச்சந்திரன் கட்சியினர் பாஸ்கர், கே.வி.என் குமார் சோமசுந்தரம் பாபுகான் சாகித் உள்ளிட்ட நற்பணி மன்றத்தினர் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்றனர் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாட்டினை உதியநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தம்பா (எ) ஜெயபிரகாஷ் செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *