அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில் நடந்தது அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்
அரியலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஞான பண்டிதன் சிறப்புரையாற்றினார் கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து அதிக தொண்டர்கள் அதிக வாகனங்களில் சென்று கலந்து கொள்வது மகளிர் அணியினரை மாநாட்டிர்க்கு அதிகமாக அழைத்து வருவது தேர்தல் முகவர்கள் படிவத்தை விரைவில் மாவட்ட செயலாளரிடம் வழங்குவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மாவட்ட பொருளாளர் சக்திவேல் தொண்டரணி ராமச்சந்திரன் கடுகுர் ஐயப்பன் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ராஜ்குமார் அரியலூர் நகர செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் நகர பொருளாளர் மோனிஷா கன்ஸ்ட்ரக்சன் ரமேஷ் ஹோட்டல் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள் மாவட்ட நகர பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு அரியலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஞானப்பண்டிதன் அரியலூர் மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் ஆகியோர் பொன்னாடைகள் அணிவித்தனர்