கோவை சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,இந்து முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில்,கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னனி மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில்,சொக்கம்புதூர் மயானம் அருகில் அமைய உள்ள கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்று வழங்கப்பட்டது..

மனுவில் கோவை சொக்கம்புதூர் பகுதியில் இந்துக்களை புதைப்பதற்காகவும் எரிப்பதற்காகவும் நீண்ட வருட பயன்பாடாக மயானம் இருந்து வருவதாகவும்,
அதன்,அருகில் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,
இந்த இடத்தில் கோவை மாநகராட்சி அனுமதி பெற்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மயானத்தின் மையப்பகுதியில் வேலை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்..

இதே பகுதியில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இங்கே ஏற்பட்டால் அங்கு வாழக்கூடிய மக்களுக்கும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும்
பேராபத்தாக முடியும்.

எதிர்காலத்தில் இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தினால்
நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதோடு, பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை மாற்று இடத்தில் அமைக்குமாறு கேட்டு கொள்வதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கும் போது, இந்து முன்னனி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் கோட்ட மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *