செங்குன்றம் செய்தியாளர்
ஜீலை 7
மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக ,விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை ,யாக கால பூஜை ,தன பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உட்பட பல யாகங்கள் நடைபெற்றது .அதனை தொடர்ந்து நான்காம் காலயாக பூஜை நாடி சந்தானம் மூல மந்திரம் ஜெப யாகம் நடைபெற்று தீப ஆராதனை சங்கல்பம் நடைபெற்றது .
அதன் பின்னர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தின் மேல் ஊற்றி சிவாச்சாரியார்களால் மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தேறியது.
அதன் பின்னர் கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் ,சென்னை மாநகராட்சி நிலை குழு தலைவர் இளைய அருணா , 29 வது மாவட்ட உறுப்பினர் கார்த்திக் திருநாவுக்கரசு மற்றும் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ,வேலாயுதம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாந்தி எத்திராஜன், வட்டக் கழகச் செயலாளர்கள் எத்திராஜன், ஜெ. காமேஷ் உட்பட முக்கிய பிரபலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் பக்த கோடிகள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது . இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பாலமுருகன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் சிறப்புடன் செய்து இருந்தனர். இதில் அப்பகுதியை சார்ந்த ஏராளமானோர் முருகனின் அருளை பெற்று சென்றனர்