திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஊராட்சி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தொடர்ந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து கொண்டே வருகின்றன தற்போது உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப் பூண்டு விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர்
இரவு விவசாய நிலத்திற்குள் காட்டுப்பன்றி கூட்டம் நுழைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது கொடைக்கானல் மேல்மலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக வனத்துறை மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.