சத்தியமங்கலம் ஜூலை 7 சத்தியமங்கலத்தில் ஒக்கலிகர் இன பேரரசர் கெம்பே கவுடரின் 516 ஆம் ஆண்டு கெம்பே கவுடர் ஜெயந்தி விழா, கெம்பே கவுடர் பவுண்டேஷன் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது, இதில் சுமார் 500 கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்
இதில் கெம்பே கவுடர் பவுண்டேசன் மாநில தலைவராக . கிஷோர் குமார் , மாநில செயலாளராக .தமிழ் ஆதி , மாநில பொருளாளராக செல்வன்.அரவிந்த் ஒக்கலிக கவுடர் இளைஞர்கள் சார்பாக முன்மொழியப்பட்டு பொறுப்பேற்றனர்.
இவ்விழாவில் வடவள்ளி கார்த்திகேயன் மல்லியம்பட்டி பூபதி ,பட்டரமங்கலம் பிரசாந்த், புளியம்பட்டி சதீஷ், ஆலாம்பளையம் வருண், மனோஜ்பிரவீன், மதன்ராஜ், சிக்கரசம்பாளையம் புதூர் இளைஞர்கள், ஏழுர் இளைஞர்கள், மற்றும் ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் இளைஞர்கள் ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர்.