அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு ஊராட்சியில் சோழவந்தான் தொகுதி சார்பாக நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது
ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் அலங்காநல்லூர் நகர் கழகச் செயலாளர் அழகுராஜ் முன்னிலை வகித்தார். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தினையும் தொடங்கி வைத்து வழங்கினார். இதில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா மாணிக்கம், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், வார்டு செயலாளர்சுந்தர்ராகவன், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன்,
உள்பட அண்ணா திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.