ஏலகிரி மலையில் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சாரல் குடில் ரிசல்ட் இன்று பிற்பகல் 12 மணியளவில் தமிழ்நாடு கிரிப்டோ கரன்சி சார்பில் விழிப்புணர்வு கிரிப்டோ கரன்சி நிறுவனத் தலைவர் சி. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் எங்கும் பல்வேறு வகையான ஆன்லைன் பிசினஸ் மற்றும் மல்டி லெவல் பிசினஸ் நடைபெற்று வருகிறது. இது போன்ற நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள்

இதனை தவிர்க்கும் விதமாக தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் 50 மேற்பட்ட நாடுகளில் தொடங்கப்பட்டுள்ள கிரிப்டோ கரன்சி மூலம் உங்கள் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு சொத்து சேர்ப்பதற்கு நிலம், நகை இவற்றையெல்லாம் விட தலைச்சிறந்த முதலீடாக கிரிப்டோ கரன்சி முதலீடு திகழும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அனைத்து உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசிடம் இருந்தும் பல்வேறு துறைகளிடமிருந்தும் அனுமதி பெற்று தான் கிரிப்டோகரன்சி நடைபெற்று வருகிறது எனவே பொதுமக்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

1.கிரிப்டோ கரன்சி குழந்தைகளின் எதிர்காலம் தீர்மானித்தல் 2.அந்த காலம் இந்த காலம் இனி கிரிப்டோ கரன்சி காலம் 3.டிஜிட்டல் அசட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 4.கிரிப்டோ கரன்சி உண்மையா பொய்யா! 5.அண்டத்தை கலக்கும் கிரிப்டோ கரன்சி மேலும் கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் முதலீட்டில் மட்டும் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் சுமார் 40 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

டிஜிட்டல் பயன்பாடு வளர வளர கிரிப்டோ கரன்சி விலை தங்கத்தை விட பல மடங்கு வளரும் தங்கத்தின் மாற்றுத்தான் கிரிப்டோ கரன்சி 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கிரிப்டோ கரன்சி செயல்பட்டு வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் G.pay, phone pay, paytm, போன்று தான் கிரிப்டோ கரன்சியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிரிப்டோ கரன்சியில் சிறப்பாக பணியாற்றிய கிரிப்டோ கரன்சி வாடிக்கையாளர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

உடன் கிரிப்டோ கரன்சி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், அகிலன் ,செல்வி குமார், சரவணன், கேசவன், சஞ்சய் பிரகாஷ், சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *